தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்; எஞ்சின்களும் தீப்பிடித்தன

மத்திய பிரதேசத்தில் 2 சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் அவற்றின் எஞ்சின்களும் தீப்பிடித்து எரிய தொடங்கியன.

தினத்தந்தி

ஷாதூல்,

மத்திய பிரதேசத்தின் ஷாதூல் நகரில் சிங்பூர் ரெயில் நிலையம் அருகே 2 சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் இன்று மோதி கொண்டன. மோதிய வேகத்தில் ஒரு ரெயிலின் என்ஜின் மற்றொரு ரெயிலின் மீது ஏறியது.

இந்த சம்பவத்தில் இரு ரெயில் எஞ்சின்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. ரெயில் விபத்தில் இரு ரெயில்களின் ஓட்டுநர்களும் காயமடைந்து உள்ளனர். 2 ரெயில்வே பணியாளர்கள் விபத்தில் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் மீட்பு பணிக்காக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று உள்ளனர். இதனால், பிலாஸ்பூர் மற்றும் கத்னி வழியே செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை