தேசிய செய்திகள்

குடியரசு தின உரையை நிறுத்தி ஆட்சியரை வாசிக்க சொன்ன பெண் மந்திரி

மத்திய பிரதேசத்தில் ஆட்சியரை குடியரசு தின உரை வாசிக்கும்படி மந்திரி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

குவாலியர்,

நாடு முழுவதும் 70வது குடியரசு தினம் இன்று கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய பிரதேசத்தில் மந்திரியாக இருக்கும் இமர்த்தி தேவி குவாலியர் நகரில் குடியரசு தின உரையை வாசித்து கொண்டு இருந்துள்ளார். அவர் அருகே மாவட்ட ஆட்சியர் நின்றபடி அதனை கவனித்து கொண்டு இருந்துள்ளார்.

இந்த நிலையில், திடீரென தனது உரையை நிறுத்திய அவர் மீதமுள்ளவற்றை வாசிக்கும்படி ஆட்சியரை அழைத்து உள்ளார். இதனை அடுத்து ஆட்சியர் தொடர்ந்து உரையை வாசித்து உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுபற்றி பின்னர் இமர்த்தி தேவி செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறும்பொழுது, கடந்த 2 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். நீங்கள் மருத்துவரிடம் இதுபற்றி கேட்டு கொள்ளலாம். ஆட்சியர் உரையை முறையாக வாசித்து உள்ளார் என தெரிவித்து உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு