போபால்,
மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் பந்தலை கிராம பஞ்சாயத்தில் இருந்து ருக்மணி பாய் என்பவர் போட்டியிட்டு உள்ளார். இவரை எதிர்த்து ஜெயந்தி பாய் என்பவர் போட்டியிட்டு உள்ளார்.
இந்த தேர்தலுக்கான முடிவுகள் கடந்த சனிக்கிழமை மாலை வெளியானது. அதில், ருக்மணி பாய் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்று கிழமை காலை அவர் உயிரிழந்து உள்ளார். இதுபற்றி மாவட்ட கலெக்டர் ரிஷி கார்க் தகவலறிந்து, விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
ருக்மணி பாய்க்கு ராஜேஷ் மற்றும் முகேஷ் என 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில், ராஜேஷ் கூறும்போது, மக்களின் மனமொத்த ஆதரவுடன் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட்டார். இரவில் வெற்றி கொண்டாட்டங்கள் நடந்தன. இரவு உணவு முடிந்து அவர் தூங்க சென்றார். ஆனால் காலையில் எழுந்திருக்கவில்லை என கூறியுள்ளார்.