கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கொரோனாவால் பலியாகும் அரசு ஊழியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - மத்திய பிரதேச அரசு உத்தரவு

கொரோனாவால் பலியாகும் அரசு ஊழியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

போபால்,

மத்திய பிரதேசத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு தொற்றுக்கு பலியாகும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதனால் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மத்தியபிரதேசத்தில் கொரோனாவுக்கு பலியாகும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா நேற்று தெரிவித்தார்.

மேலும் உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?