மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி மாநிலத்தில் புதிதாக 6,388 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 63,75,390 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 208 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,34,572 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று மேலும் 8,390 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 61,75,010 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் 62,351 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 5,03,26,812 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.