பாட்னா,
பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று தொகுதி பங்கீடு நிறைவுபெற்று இறுதி நிலவரம் அறிவிக்கப்பட்டது. இதனை லாலுபிரசாத்தின் மகனும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர்களில் ஒருவருமான தேஜஸ்வி யாதவ் அறிவித்தார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் யாரும் பங்கேற்காததன் மூலம் அதன் அதிருப்தி வெளியானது.
ராஷ்டிரீய ஜனதாதளம் 20 தொகுதிகளிலும் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு ஒரு தொகுதி உள்பட), காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், உபேந்திரா குஷ்வாஹாவின் ராஷ்டிரீய லோக் சமதா கட்சி 5 தொகுதிகளிலும், ஜித்தன்ராம் மன்ஜியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி, முகேஷ் ஷானியின் விகாஷீல் இன்சான் கட்சி ஆகியவை தலா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பாடலிபுத்ரா தொகுதியில் லாலுவின் மகள் மிசா பார்தியும், சாசரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாரும் போட்டியிடுகிறார்கள்.