மும்பை,
மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியுடன் அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, துணை முதல் மந்திரி அஜித் பவாரும் உடன் இருந்தார். ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது 12 எ.எல்.சி உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தியாக தெரிகிறது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அஜித் பவார், மேல் சபை உறுப்பினர்கள் பதவிக்கு மாநில அரசு பரிந்துரைத்த நபர்களின் பெயர்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் கவர்னரிடம் கூறினோம். எங்கள் கோரிக்கைகளை கவர்னர் கேட்டுக்கொண்டார். உரிய நேரத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கவர்னர் கூறியுள்ளார் என்றார்.