தேசிய செய்திகள்

‘மகா பூர்ணிமா’: கங்கையில் புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்..!

‘மகா பூர்ணிமா’வை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் நேற்று புனித நீராடினர்.

தினத்தந்தி

பிரயாக்ராஜ்,

கொரோனா தொற்று அபாயத்துக்கு மத்தியில், மகா பூர்ணிமாவை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கங்கை நதியில் நேற்று புனித நீராடினர்.

கங்கை நதியிலும், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கமத்திலும் நேற்று காலை முதல் சுமார் 4.50 லட்சம் பேர் புனித நீராடினர். அவர்களில், ஏராளமான முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மகா பூர்ணிமாவை ஒட்டி பிரயாக்ராஜில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக நிறுவப்பட்டன. சங்கம பகுதியில், நிர்வாக வாகனங்கள், ஆம்புலன்சுகள் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இன்று இரவு 10 மணி வரை செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு