தேசிய செய்திகள்

மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் இந்திராணி உள்பட 40 கைதிகளுக்கு கொரோனா

பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி உள்பட 40 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மும்பை,

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மும்பை பைகுல்லாவில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அண்மையில் அந்த சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஆன்டிஜென் முறையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் இந்திராணி உள்பட சுமார் 40 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திராணி முகர்ஜி உள்பட 40 பெண் கைதிகளையும் பைகுல்லாவில் உள்ள பட்டான்கர் பள்ளியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், ஒரே ஒரு பெண் கைதியின் உடல்நிலை மோசமடைந்ததால் செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்