தேசிய செய்திகள்

வீர சாவர்கருக்கு அல்ல, நாதுராம் கோட்சேவுக்கு பாரத ரத்னா கொடுங்கள் - காங்கிரஸ் விமர்சனம்

வீர சாவர்கருக்கு அல்ல, நாதுராம் கோட்சேவுக்கு பாரத ரத்னா கொடுங்கள் என்று பாஜகவை காங்கிரசை சாடியுள்ளது.

தினத்தந்தி

நாக்பூர்,

மராட்டிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாரதீய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வினாயக் தாமோதர் சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி, நேரடியாக நாதுராம் கோட்சேவுக்கு பாரத ரத்னா விருதை பாஜக கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மனிஷ் திவாரி கூறியதாவது:- மகாத்மா காந்தியை கொலை செய்ய சதி செய்ததாக மட்டுமே சாவர்க்கர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதேவேளையில், நாதுராம் கோட்சே தான் கொலையை அரங்கேற்றினார். காந்தியின் 150 - பிறந்த தினத்தை கொண்டாடிய இந்த ஆண்டு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, சாவர்கருக்கு பதிலாக நாதுராம் கோட்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்