தேசிய செய்திகள்

விசாரணைக்கு ஆஜராகுமாறு பரம்பீர் சிங்கிற்கு குற்றப்புலனாய்வு பிரிவு நோட்டீஸ்

விசாரணைக்கு ஆஜராகுமாறு பரம்பீர் சிங்கிற்கு குற்றப்புலனாய்வு பிரிவு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தினத்தந்தி

விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்

முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மும்பை, தானேயில் மிரட்டி பணம் பறித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்ட பரம்பீர்சிங் கடந்த வியாழக்கிழமை சண்டிகரில் இருந்து மும்பை வந்தார். அவர் மும்பை, தானே போலீசார் முன் தன் மீதான வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரானார்.

இந்தநிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மாநில குற்றப்புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி.) பரம்பீர் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவு பரம்பீர் சிங்கிற்கு எதிராக மெரின்லைன், கோப்ரி போலீசார் பதிவு செய்து உள்ள மிரட்டி பணம் பறித்தல் வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளில் பரம்பீர் சிங்கின் பங்கு குறித்து விசாரிக்க தான் குற்றப்புலனாய்வு பிரிவு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனவே நாளை (திங்கள்), நாளை மறுநாள் நவிமும்பை பேலாப்பூரில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் பரம்பீர் சிங் விசாரணைக்கு ஆஜர் ஆவார் எனகூறப்படுகிறது. ஏற்கனவே மெரின்டிரைவ் வழக்கு தொடர்பாக குற்றப்புலனாய்வு பிவு இன்ஸ்பெக்டர் நந்குமார் கோபாலே, ஆஷா கோர்கே ஆகியோரை கைது செய்து உள்ளது.

வக்கீலை நீக்க கடிதம்

இதற்கிடையே தானே நகர் போலீசார் பரம்பீர்சிங்கிற்கு எதிராக பதிவு செய்த மிரட்டி பணம் பறித்த வழக்கில் அரசு தரப்பில் வாதாட சேகர் ஜக்தாப், பிரதீப் காரத் ஆகிய 2 வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பிரதீப் காரத்தை அரசு தரப்பு வக்கீலாக நியமித்தை ரத்து செய்யுமாறு தானே போலீஸ் கமிஷனர் ஜெய்ஜீத் சிங் மாநில டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது