கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீசத் தொடங்கி உள்ளது. கடந்த ஜனவரியில் கட்டுக்குள் வந்த கொரோனா, பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த சூழலில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், சுற்றுலாத்துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரேக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரேக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் முதல்-மந்திரியின் வர்ஷா பங்களாவில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார்.

முன்னதாக உத்தவ் தாக்கரேயும், அவரது மனைவி ராஷ்மி தாக்கரேயும் கடந்த 11-ந் தேதி மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்தநிலையில் ராஷ்மி தாக்கரே தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்