தேசிய செய்திகள்

சைரஸ் மிஸ்திரி சென்ற கார் விபத்து: விசாரணைக்கு பட்னாவிஸ் உத்தரவு

சைரஸ் மிஸ்திரி , கார் விபத்தில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணைக்கு மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

டாடா சன்ஸ் குழும முன்னாள் சேர்மன் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தார். மராட்டிய மாநிலம் பால்கர் எனும் இடத்தில் உள்ள டிவைடரில் அவரது பென்ஸ் கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்தநிலையில்,

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி , கார் விபத்தில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணைக்கு மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

மும்பை அருகே பல்ஹர் பகுதியில் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது குறித்து அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இது தொடர்பாக போலீஸ் டிஜிபி உடன் பேசி உள்ளேன். விபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தும்படி அறிவுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்