தேசிய செய்திகள்

இயற்கைக்கு மாறாக எருமை மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது

புனேவில் இயற்கைக்கு மாறாக எருமை மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நேபாள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புனே,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தின் டெக்கான் பகுதியில் ஒரு எருமை மாடு வயலில் புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு நபர் எருமையை மறைவான இடத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர், அங்கு வைத்து எருமையுடன் இயற்கைக்கு மாறாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

எதேச்சையாக அவ்வழியாக வந்த சிலர் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அங்கிருந்து நழுவும் விதமாக முன்னுக்குப் பின் முரணாக வாக்குவாதம் செய்துள்ளார். இதற்குள் அங்கு பொதுமக்கள் கூடிய நிலையில், வாக்குவாதம் செய்த அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த நபர் நிலை குலைந்து விழுந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு வயது 38 என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த நபர் மீது இபிகோ 377 சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர். விலங்குடன் ஒரு நபர் இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு கொண்டு கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இதுபோல் கால்நடைகளுடன் மனிதர்கள் இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்