தேசிய செய்திகள்

இலவசமாக வாழைப்பழம் கேட்ட இளைஞர்... தராததால் ஆத்திரத்தில் மாற்றுத்திறனாளி வியாபாரியை தாக்கிய கொடூரம்

வாழைப்பழங்களை இலவசமாக தர மறுத்ததால், மாற்றுத்திறனாளி பழ வியாபாரியை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

பயந்தர்,

மராட்டிய மாநிலம் பயந்தரில், வாழைப்பழங்களை இலவசமாக தர மறுத்ததால், மாற்றுத்திறனாளி பழ வியாபாரியை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பயந்தரில் உள்ள தாக்கூர் காலிக்கு வெளியே தள்ளுவண்டியில் வைத்து மாற்றுத்திறனாளி பழ வியாபாரி ஒருவர் வாழைப்பழங்களை விற்றுக் கொண்டிருந்தார், அப்போது இளைஞர் ஒருவர் நான்கு வாழைப்பழங்களை இலவசமாக தரும்படி அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த வியாபாரி மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், வியாபாரியை அடித்து உதைத்து பலவந்தமாக தரையில் தள்ளினார். இதில் பழ வியாபாரிக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது