தேசிய செய்திகள்

மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ.60 ஆயிரம் கோடி கடன் வாங்க அனுமதி- மகாராஷ்டிரா முதல்-மந்திரி அலுவலகம்

மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ.60 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளதாக முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

ரூ.1 லட்சம் திட்டப்பணிகள்

மும்பை மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) மேம்பாலம் கட்டுதல், கடற்கரை சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் மெட்ரோ திட்டப்பணிக்காக தானே - போரிவிலி சுரங்கபாதை அமைத்தல், தானே கடற்கரை சாலை திட்டம், சிவ்ரி - ஒர்லி இணைப்பு சாலை உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 940 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ரூ.60 ஆயிரம் கடன்

இந்தநிலையில் இந்த திட்டப்பணிகளை முடிக்க மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ.60 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி கொள்ள மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் கடனுக்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்கும் எனவும், முதல் கட்டமாக வாங்கப்படும் ரூ.12 ஆயிரம் கோடிக்கு உத்தரவாதத்திற்கான முத்திரை தாள் தொகை தள்ளுபடி செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.

இதுகுறித்து முதல்-மந்தி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், உள்கட்டமைப்பு பணிகளை முடிக்க மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ.60 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது என கூறப்பட்டுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு