தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 10 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

மராட்டியத்தில் 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. தினந்தோறும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிகிச்சை மையங்கள் நிரம்பி வருகின்றன. இந்தநிலையில் நோய் பரவல் சங்கிலியை உடைக்க முழு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

முழு ஊரடங்கு 8, 15 அல்லது 21 நாட்களுக்கு இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்த இறுதி முடிவை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நாளை மறுநாள் (புதன்கிழமை) மந்திரி சபையை கூட்டி எடுப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, மராட்டியத்தில் 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் உடல் நலனுக்கே முன்னிரிமை என தெரிவித்துள்ள மராட்டிய அரசு, மே மாத இறுதியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், ஜுன் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் கொரோனா சூழல் மேம்படுவதை பொருத்து தேர்வு நடைபெறும் சரியான தேதி பின்னர் வெளியிடப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு