கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 10,989 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 261 பேர் பலி

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,63,880 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 261 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,01,833 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று மேலும் 16,379 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், மாநிலத்தில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 55,97,304 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்புடன் தற்போது 1,61,864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் இன்று 788 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு, பரவல் வேகம் குறைந்துள்ளதால் மராட்டியத்தில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு