தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் மேலும் 1,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 1,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தினத்தந்தி

மும்பை,

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பேதிலும், நாட்டில் கெரேனா பாதிப்பு தெடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புகளில் மராட்டிய மாநிலம் முதல் இடத்தில் நீடிக்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அங்கு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில் இன்று மேலும் 1,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 21,467 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் இன்று கொரோனா தொற்றுக்கு 49 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,068 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 6,564 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்