கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று புதிதாக 3,218 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 51 பேர் பலி

மராட்டியத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன்படி இன்று மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 38 ஆயிரத்து 854 ஆக உயர்ந்து உள்ளது.

இன்று மாநிலத்தில் 2 ஆயிரத்து 110 பேர் வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமாகினர். இதுவரை மொத்தம் 18 லட்சத்து 34 ஆயிரத்து 935 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உள்ளனர். இதன்மூலம் குண்மடைவோர் விகிதம் 94.64 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் தற்போது 53 ஆயிரத்து 137 பேர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் மேலும் 51 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை தொற்றுக்கு 49 ஆயிரத்து 631 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் இறப்பு விகிதம் 2.56 சதவீதமாக உள்ளது.

தலைநகர் மும்பையில் புதிதாக 593 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,94,660 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நகரில் மேலும் 7 பேர் பலியானதால் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 132 ஆக அதிகரித்து உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு