கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு

மராட்டியத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணயம் செய்ய வழிமுறைகள் வகுக்கப்பட்டன.

இந்தநிலையில் இந்த பணிகள் முடிந்து இன்று 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.சி.) தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக மந்திரி வர்ஷா கெய்க்வாட் தனது டுவிட்டரில், மராட்டிய மாநில உயர்நிலை, மேல்நிலை கல்வி வாரியம் 10-ம் வகுப்பு தேர்வு முடிவை இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியளவில் வெளியிடுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மாணவர்கள் தேர்வு முடிவை result.mh-ssc.ac.in மற்றும் www.mahahsscboard.in என்ற இணைதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை