மும்பை,
மராட்டிய மாநிலம் ரத்னகிரி பகுதியில் உள்ள சிப்லுன் என்ற இடத்தில், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி ஆதரவாளர்களுக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக பா.ஜ.க. முன்னாள் எம்.பி. நிலேஷ் ராணே தனது காரில் குஹாகர் பகுதியில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், நிலேஷ் ராணேவின் கார் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பா.ஜ.க. மற்றும் சிவசேனா ஆதரவாளர்களிடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்தது. இதில் மேலும் சில வாகனங்கள் சேதமடைந்தன. இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.