தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 12,645 பேர் குணமடைந்தனர்

மராட்டியத்தில் தற்போது 82,082 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மராட்டியத்தில் இன்று புதிதாக 6,258 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மராட்டிய மாநிலத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 6,276,057 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 254 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,31,859 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று ஒரேநாளில் 12,645 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 60,58,751 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு 82,082 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை