மும்பை,
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று பாதிப்புக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.
இந்த சூழலில் இன்று மராட்டிய மாநிலத்தின் அமைச்சர்வைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்துவது குறித்த மாநில அரசின் முடிவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1ஆம் தேதி தடுப்பூசி போடப்போவதில்லை என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாம் கட்ட தடுப்பூசி மே 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள் குறிப்பிட்ட வயதினருக்கு செலுத்தப்பட்டிருந்தாலும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது இதுவே முதல் முறை. தடுப்பூசி தயாரிப்பாளர்கள் தடுப்பூசிகளை நேரடியாக மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.