தேசிய செய்திகள்

டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரிய அளவில் ஏற்பட்ட தீயை அணைக்க 22 தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

வடக்கு டெல்லியின் நரேலா தொழிற்பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று அமைந்து உள்ளது. இங்கு அதிகாலை வேளையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து 22 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி தெரியவரவில்லை.

கடந்த மாதம், மத்திய டெல்லியில் அரசு அலுவலகங்கள் நிறைந்த கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதுகாவலர் ஒருவர் சிக்கி பலியானார். இதற்கு ஒரு மாதத்திற்கு முன் கரோல் பாக் பகுதியில் ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட பெரிய அளவிலான தீ விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை