தேசிய செய்திகள்

தலைநகரில் பெண்கள் பாதுகாப்பு பற்றி ஜனாதிபதியை சந்தித்து டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் பேசினார்

டெல்லி பெண்கள் ஆணையத்தின் தன்னார்வ தொண்டர் மீது தாக்குதல் நடந்த நிலையில் அதன் தலைவர் இன்று ஜனாதிபதி கோவிந்தை சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியின் நரேலா பகுதியில் மாஃபியா கும்பல் ஒன்று சட்டவிரோத சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளது. இதுபற்றிய தகவலை வெளியுலகிற்கு கொண்டு வரும் முயற்சியில் டெல்லி பெண்கள் ஆணையத்திற்கு அதன் தன்னார்வ தொண்டர் ஒருவர் உதவியுள்ளார்.

இதனால் அந்த பெண் மாஃபியா கும்பலால் அடித்து தாக்கப்பட்டு, நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்டார் என கடந்த வியாழ கிழமை குற்றச்சாட்டாக கூறினார்.

இந்த நிலையில் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் இன்று சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் நரேலா பகுதியில் நடந்த தாக்குதல் உள்பட தேசிய தலைநகரில் பெண்கள் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றி பேசியுள்ளார்.

இதன்பின்னர் டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசினேன். சந்திப்பு நன்றாக நடந்தது. முழு ஒத்துழைப்பு வழங்க அவர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்