தேசிய செய்திகள்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மல்லிகார்ஜுன கார்கே

கார்கே நலமுடன் இருப்பதாகவும், விரைவில் தனது பணிகளை தொடங்குவார் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காய்ச்சல் மற்றும் உடல்நல பிரச்சினைகள் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்த அறிவுறுத்தினர்.

இதையடுத்து கார்கேவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து தற்போது வீடு திரும்பியுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் தனது பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து