தேசிய செய்திகள்

மக்களவை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே இன்று ஆலோசனை

ஆலோசனைக் கூட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணியுடனான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியுடனான தொகுதி பங்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்