தேசிய செய்திகள்

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாயுடு மற்றும் மம்தா சிறை செல்ல நேரிடும்; சட்டீஸ்கார் முன்னாள் முதல் மந்திரி

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சந்திரபாபு நாயுடு மற்றும் மம்தா பானர்ஜி சிறைக்கு செல்ல நேரிடும் என சட்டீஸ்கார் முன்னாள் முதல் மந்திரி கூறியுள்ளார்.

ராஞ்சி,

சட்டீஸ்கார் முன்னாள் முதல் மந்திரி ரமன் சிங் கட்சி கூட்டமொன்றில் இன்று பேசும்பொழுது, மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கு மம்தா பானர்ஜி செய்து வரும் கொடுமைகள் பற்றி ஒவ்வொருவருக்கும் தெரியும்.

அங்கு சமீபத்தில் சி.பி.ஐ. மற்றும் கொல்கத்தா போலீசார் தொடர்புடைய சம்பவங்கள் முதல் மந்திரி பானர்ஜியின் உத்தரவின்படியே நடந்துள்ளது என்று பேசினார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தல் ஊழல் சக்திகளுக்கு எதிரான தர்மயுத்தம் என குறிப்பிட்ட அவர், நாயுடு மற்றும் மம்தா ஆகியோர் பிரதமர் மோடிக்கு சவால் விட முயற்சிக்கின்றனர். அவர் மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஆட்சிக்கு வந்தால் அனைத்து ஊழல்களும் வெளிவரும். அவர்கள் இருவரும் சிறைக்கு செல்ல வேண்டி வரும் என கூறியுள்ளார்.

நாட்டை கொள்ளையடித்த மற்றும் ஊழலுடன் தொடர்புடைய காங்கிரஸ், இடதுசாரி, சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகளிடையே பாரதீய ஜனதா கட்சியின் எழுச்சி அமைதியின்மையை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்