தேசிய செய்திகள்

மம்தா பானர்ஜி தனது அச்சத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துகிறார்; ஓவைசி கடும் விமர்சனம்

மம்தா பானர்ஜி தனது அச்சத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துகிறார் என்று ஓவைசி கடுமையாக சாடியுள்ளார்.

ஐதராபாத்,

மேற்குவங்கம் கூச் பேகர் நகரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக பெதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கெண்டு பேசினார். அப்போது அவர், "இந்துக்களிடையே தீவிரவாத போக்கு இருப்பதுபோல், சிறுபான்மையினரிடையேயும் தீவிரவாத போக்கு வளர்ந்து வருகிறது. ஐதராபாத்தில் ஒரு அரசியல் கட்சி உள்ளது. அது, பாஜகவிடம் பணம் வாங்கிவிட்டு செயல்படுகிறது" என்றார்.

அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை மம்தா பானர்ஜி இவ்வாறு விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்துள்ள ஓவைசி, "எங்கள் கட்சி மேற்குவங்கத்தில் வளர்ச்சியடைந்துள்ளது என்பதை என்னை விமர்சிப்பது மூலம் அங்குள்ள இஸ்லாமியர்களிடம் மம்தா தெளிவுப்படுத்தியுள்ளார். அவரின் கருத்து மூலம் மம்தாவின் பயமும் விரக்தியும் வெளிப்பட்டுள்ளது என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு