கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஜி-20 மாநாடு ஆலோசனை: மம்தா பானர்ஜி 5-ந்தேதி டெல்லி பயணம்

ஜி-20 மாநாடு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மம்தா பானர்ஜி 5-ந்தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 20 வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. அந்தவகையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தை பிரதமர் மோடி நடத்துகிறார். இதில் பங்கேற்பதை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 5-ந்தேதி டெல்லி செல்கிறேன். ஆனால் இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரியாக அல்லாமல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக பங்கேற்பேன்' என்று தெரிவித்தார். இந்த கூட்டத்துக்கு இடையே பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசுவார் என மாநில அரசு வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்