தேசிய செய்திகள்

தடுப்பூசி இயக்கத்தை அரசியலாக்க மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார் - பாஜக குற்றச்சாட்டு

நாடு முழுவதும் நடைபெறும் தடுப்பூசி இயக்கத்தை அரசியல்மயமாக்க மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா கூறி உள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா

மேற்கு வங்காள மாநிலத்திலும் முன்கள பணியாளர்களுக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில்

முன்கள பணியாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கு வங்காள மாநில மக்களுக்கும் போதுமான அளவு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.குறைவான தடுப்பூசிகள் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.

மாநில அரசு பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என நினைக்கிறது. தேவைப்பட்டால் அதற்கான நிதிச்சுமையை ஏற்றுக்கொள்ள மேற்கு வங்காள அரசு தயாராக இருக்கிறது என கூறினார்.

இது குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா கூறும் போது மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குறைவான தடுப்பூசிகள் மாநிலத்திற்கு அனுப்பப்படுவதாகக் குற்றம் சாட்டியது ஆதாரமற்றது. மம்தா சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தடுப்பூசி திட்டத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார்.

அவர் எல்லாவற்றையும் அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும். எந்தவொரு மாநிலமும் இதுபோல் புகார் செய்யவில்லை. சட்டசபை தேர்தலுக்கு முன்னர் அவர் பிரச்சினையை அரசியல் மயமாக்க முயற்சிக்கிறார் என கூறினார்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு