தேசிய செய்திகள்

11 வயது மருமகளை பாலியல் பலாத்காரம் செய்த மாமா ;அழுத சிறுமிக்கு சிப்ஸ் பாக்கெட் வாங்கி கொடுத்த கொடுமை

அசாமில் 11 வயது சிறுமியை அவரது மாமா முறை உறவினரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தினத்தந்தி

துப்ரி

அசாம் மாநிலம், துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை அதுல் பிஸ்வாஸ் (31 வயது) என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். சிறுமிக்கு பிஸ்வாச் மாம முறைவேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக தாம்ராத் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்தார்.

அந்த புகாரியில் எனது உறவினர் அதுல் பிஸ்வாஸ் என்பவர் என்னுடைய மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். என் மகள் வீட்டுக்கு அழுது கொண்டே வந்தார். அதன் பிறகு தனக்கு நேர்ந்த சம்பவத்தைப் பற்றி கூறினார்.

அந்த நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி விட்டு என்னுடைய குழந்தை அழுத போது, அவருக்கு ரூ.100 பணமும், ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கையில் கொடுத்து அனுப்பி இருக்கிறார்'' என கூறியிருந்தார்.

போலீசார் அந்த நபரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்