தேசிய செய்திகள்

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த நபர் ராஜஸ்தானில் கைது

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த நபரை சி.ஐ.டி. போலீசார் ராஜஸ்தானில் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் ஜெய்சால்மர் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயண் பாலிவால் (வயது 42). பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஏஜெண்டு ஒருவருடன் தொடர்பில் இருந்து கொண்டு இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்களை அவரிடம் பகிர்ந்து வந்துள்ளார்.

இதுபற்றி அறிந்த சி.ஐ.டி. போலீசார் (சிறப்பு பிரிவு) அவரை நாட்டுக்கு எதிராக உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் கீழ் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் ஏஜெண்டுடன் தொடர்புப்படுத்தி கொண்டதும், நாட்டின் ராணுவம் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருந்ததும், அவற்றை ஏஜெண்டிடம் பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து பாலிவாலை அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் சி.ஐ.டி. (சிறப்பு பிரிவு) போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்