தேசிய செய்திகள்

கோழிப்பண்ணையில் இருந்து கோழி திருட முயன்ற நபர் அடித்துக் கொலை

மேற்கு வங்காளத்தில் கோழிப்பண்ணையில் இருந்து கோழி திருட முயன்ற நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

ஜார்கிராம்,

மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தில் கோழிப்பண்ணையிலிருந்து கோழிகளைத் திருட முயன்றபோது பிடிபட்ட நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கிராம் காவல் நிலையப் பகுதியில் உள்ள டல்காதி கிராமத்தில், உள்ள ஒரு கோழிப் பண்ணைக்கு நுகு மாலிக் என்ற நபர் கோழிகளைத் திருடச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது மாலிக்கை, பண்ணையின் உரிமையாளர் பூபென் மஹதோ கையும் களவுமாக பிடித்தார். பின்னர் பண்ணைக்கு வெளியே உள்ள மின்கம்பத்தில் மாலிக்கை கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

அந்த இடத்தில் கிராம மக்கள் திரண்டதையடுத்து, பண்ணை உரிமையாளர் மாலிக்கை அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் பண்ணைக்குச் சென்றார். பலத்த காயமடைந்த மாலிக் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பண்ணை உரிமையாளரை கைது செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து