மும்பை,
நவி மும்பையைச் சேர்ந்த 17 வயதான சிறுமியும், மும்பையின் கோவண்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது வாலிபரும் நட்பாக இருந்திருக்கின்றனர். இந்நிலையில் அந்த வாலிபர் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் அந்த சிறுமி கர்ப்பமாகியிருக்கிறார். இதனால் மனமுடைந்த சிறுமி நவம்பர் 28ஆம் தேதி தனது வீட்டின் கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், கோபர்கைரானே போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை நேற்று கைது செய்தனர்.