தேசிய செய்திகள்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காரை மறித்த இளைஞர் கைது

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காரை மறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கான்வாய் முன்பு பாய்ந்த இளைஞரை கைது செய்து பேலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள விஜய் சவுக் பகுதியில், ராஜ்நாத் சிங்கின் கார் வந்து கொண்டிருந்தது. ராஜ்நாத்சிங்கின் காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. அப்போது திடீரென வாகன அணிவகுப்பு முன் குறுக்கே வந்த நபர் ஒருவர், ராஜ்நாத் சிங் பயணித்த காரை நெருங்கினார். அந்த நபரை மடக்கி பிடித்த பாதுகாப்பு படையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரனையில், உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரைச்சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. தனது ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால், ராஜ்நாத் சிங்கை வழிமறித்ததாக கூறினார். மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல தெரிவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. எனினும், அந்த நபரிடம் உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு