தேசிய செய்திகள்

ரூ.5 ஆயிரம் கொடுக்காததால் தாயை கொன்ற மகன் - சடலத்தை சூட்கேசில் வைத்து ரெயிலில் பயணம்

தாயைக் கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து ரெயிலில் பயணித்த மகனை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பிரயாக்ராஜ்,

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹிமான்ஷு (20 வயது). அவரது தாய் பிரதிமா தேவி (43 வயது). இவர்கள் அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தனது தாயை கொன்ற ஹிமான்ஷு, அவரது சடலத்தை ஒரு சூட்கேசில் வைத்து பிரயாக்ராஜுக்கு ரெயிலில் வந்துள்ளார். அங்கு திரிவேணி சங்கமத்தில் உடலை வீச முடிவு செய்து வந்துள்ளார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு ஹிமான்ஷு மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடித்து சூட்கேசை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது விசாரணையில், கடந்த 13-ந்தேதி ஹிமான்ஷு, அவரது தாயிடம் ரூ.5 ஆயிரம் கேட்டதாகவும் பணம் தர அவரது தாய் மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை கொன்றதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து