தேசிய செய்திகள்

குளிக்க துண்டு கொடுக்க தாமதம் மனைவி வெட்டிக் கொலை; கணவர் கைது

குளிக்க துண்டு எடுத்துகொடுக்க தாமதமானதால் கோபத்தில் கணவர் மனைவியை கொலை செய்து உள்ளார்.

போபால்

மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தின் ஹிராபூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் பாஹே (வயது 50) . வனத்துறையின் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பா பாய் ( வயது 45) . இவர்களுக்கு 23 வயது ஒரு மகள் இருக்கிறார்.

சனிக்கிழமை வேலை முடித்து வந்த ராஜ்குமார் குளித்து உள்ளார். பின்னர் மனைவியிடம் துண்டு கேட்டு உள்ளார். அப்போது புஷபா பாய் பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தார். அதனால் அவர் கணவரை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறி உள்ளார்.

இதனால் கோபம் அடைந்த ராஜ்குமார் பாஹே அருகில் கிடந்த மண் வெட்டியை எடுத்து மனைவியின் தலையில் மாறி மாறி தாக்கி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் புஷ்பா பாய் அதே இடத்தில் உயிர் இழந்தார். இதனை தடுக்க வந்த மகளையும் ராஜ்குமார் பாஹே மிரட்டி உள்ளார்.

இது குறித்து குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் பாஹேவை கைதுச் செய்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...