கண்ணூர்,
கேரளாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், கண்ணூரில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பி. ஜெயராஜன் கட்சி அலுவலகத்தில் இருந்தபொழுது நேற்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் பேசிய நபர் முதல் மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தொலைபேசி அழைப்பு பற்றி போலீசாரிடம் ஜெயராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பையனூர் பகுதியை சேர்ந்த விஜேஷ் குமார் (வயது 30) என்பவர் தொலைபேசியில் பேசியது தெரிய வந்தது.
அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் தனது தாயார் மற்றும் சகோதரி ஆகியோரது மொபைல் போன்களை பயன்படுத்தி விளையாட்டிற்காக இதுபோன்று அவர் பேசியுள்ளது தெரிய வந்துள்ளது.