புதுடெல்லி,
இந்திய ராணுவ அதிகாரியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டிய அவனை போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவன் முகத் பர்வேஸ் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்து உள்ளான், இவ்வழக்கு தொடர்பான விசாரணை சிறப்பு பிரிவு போலீசுக்கு அனுப்பட்டது. இரண்டு தெரியாத எண்களில் இருந்து வாட்ஸ்-அப்பில் தன்னுடைய மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் வந்து உள்ளது என பெண் அதிகாரி துவாரகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து செப்டம்பர் 13-ம் தேதி போலீஸ் பர்வேஸை கைது செய்து உள்ளது.
இந்த புகைப்படங்களை அனுப்பியவர்களிடம் பேசவில்லை என்றால், இணையத்தில் புகைப்படங்கள் வெளியிடப்படும் என மிரட்டப்பட்டு உள்ளது. இரண்டு எண்களையும் அதிகாரி பிளாக் செய்ததும், அவருடைய மகளுக்கு இதுபோன்ற ஆபாச புகைப்படங்கள் அனுப்பட்டு உள்ளது என போலீஸ் தெரிவித்து உள்ளது. பெண் முகவரியுடன் பேஸ்புக்கில் இருந்தும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பட்டு உள்ளது. அதிகாரியிடம் மிரட்டியது போன்று அவருடைய மகளையும் எங்களிடம் பேசவில்லை என்றால், சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்களை வெளியிடுவோம் என மிரட்டிஉள்ளனர்.
ராணுவ அதிகாரி கொடுத்த புகாரில், மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் வந்த செல்போன் எண்கள் மற்றும் பேஸ்புக் முகவரியை கொண்டு போலீஸ் விசாரணை நடத்தி பர்வேஸை கைது செய்து உள்ளது. விசாரணையின் போது பர்வேஸ் அடிக்கடி பாகிஸ்தான் சென்றது தெரியவந்தது. பாகிஸ்தானை சேர்ந்தவர்களுடைய சிம் கார்டுகளும் அவனிடம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யுடன் பர்வேஸ்க்கு தொடர்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது, விசாராணை தொடர்கிறது என போலீஸ் தெரிவித்து உள்ளது.
இந்திய ராணுவம் தொடர்பான முக்கிய தகவல்களை பெற பெண் அதிகாரியை மிரட்டும் வகையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது என்ற கோணத்தில் போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளது.