தேசிய செய்திகள்

மணிப்பூர் நிலச்சரிவு: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன் சொந்த ஊர்களுக்கு பயணம்!

14 ராணுவ வீரர்களின் உடல்கள் முழு மரியாதையுடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினத்தந்தி

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் துப்புல் யார்டு ரெயில்வே கட்டுமானப் பகுதிக்கு அருகில் உள்ள ராணுவ முகாமில் புதன்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.

இதுவரை 13 ராணுவ வீரர்கள் மற்றும் 5 பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 12 ராணுவ வீரர்கள் மற்றும் 26 பொதுமக்களை தேடும் பணி இன்னும் தொடர்கிறது

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 14 பேர் ராணுவ வீரர்கள்.

சிலிகுரி பாக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து, 2 விமானப்படை விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உயிரிழந்த 14 ராணுவ வீரர்களின் உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக, நிலச்சரிவில் உயிரிழந்த 6 அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்கள் ராணுவத்தின் பிராந்திய காலாட்படை பிரிவில் 107 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் சிக்கிய 38 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. அதே பகுதியில் இன்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை