தேசிய செய்திகள்

மனித மனதால் எந்த ஒரு நோயையும் வெல்ல முடியும்: மனோகர் பாரிக்கர்

மனிதனின் மனதால் எந்த ஒரு நோயையும் வெல்ல முடியும் என கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக புற்றுநோய் தினமான நேற்று (பிப்.4) மனோகர் பாரிக்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்ட பதிவில், மனித மனதால் எந்த ஒரு நோயையும் வெல்ல முடியும் என குறிப்பிட்டு உள்ளார்.

கோவா முதல் மந்திரியான மனோகர் பாரிக்கர் (63) கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு டெல்லி, நியூயார்க், மும்பை மற்றும் கோவாவில் சிகிச்சைப் பெற்று வந்த பாரிக்கர் கடந்த சனிக்கிழமை மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவ உடல் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்