தேசிய செய்திகள்

தினகரனுக்கு ஆதரவு அளிப்பது ஏன்? பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி விளக்கம்

தினகரனுக்கு ஆதரவு அளிப்பது ஏன்? என்பதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து பதிவிட்டு வந்தார். தன் கட்சி வேட்பாளர் தேர்தல் களத்தில் இருந்தாலும், தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தினகரனை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி தினகரனுக்கு ஆதரவு அளித்தது அனைவராலும் கவனிக்கப்பட்டது.

இந்த நிலையில், தினகரனுக்கு ஆதரவு கொடுப்பது ஏன்? என்பதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஆர்.கே நகர் வேட்பாளர்களில் பலர், நான் ஏன் பிறரைவிட பாவியான டி.டி.வி.க்கு முன்னுரிமை அளிக்கிறேன் என கேட்கின்றனர். கடவுளான ராமர் ஏன் வாலியை விட சுக்ரீவனுக்கு முன்னுரிமை அளித்தார் என படியுங்கள் என்று கூறினேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு