தேசிய செய்திகள்

மராட்டியம்: குடியிருப்பு கட்டிட விபத்தில் 7 பேர் பலி

மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் 5 அடுக்கு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் உல்லாஸ்நகரில் நேரு சவுக் என்ற பகுதியில் அமைந்த 5 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி 5வது தளத்தில் இருந்து தரைத்தளம் வரை திடீரென இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். அவர்களில் 7 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். எனினும் அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரியவரவில்லை. நான்கைந்து பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதே உல்லாஸ்நகரில் கடந்த 15ந்தேதி இதேபோன்று குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்