தேசிய செய்திகள்

மராட்டியம்: கட்டிடம் இடிந்ததில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

மராட்டியத்தில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.

தினத்தந்தி

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் எரவாடா சாஸ்திரி நகர் பகுதியில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில், தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கட்டுமான நிலையில் இருந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து புனே நகர தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்தன. மீதமுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதில், 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது. 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் லேசான காயங்களுடன் உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது