தேசிய செய்திகள்

மராட்டியம்: ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு

மராட்டியத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 15 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் கொட்டாவடே படா என்ற பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று திடீரென பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து தொழிற்சாலை முழுவதும் கரும்புகை பரவியது.

தீ விபத்து பற்றி அறிந்ததும் அருகேயிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோன்று, தகவலறிந்து தீயணைப்பு வீரர்களும் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். அந்நிறுவனத்தில் 37 பேர் பணியில் இருந்துள்ளனர். இதுவரை 20 பேரை மீட்டு உள்ளனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். 10 பேரை காணவில்லை என முதற்கட்ட தகவல் தெரிவித்தது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மீட்பு பணியும் தொடர்ந்து வருகிறது என தீயணைப்பு துறை தெரிவித்தது.

இந்நிலையில், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் 15 பேர் பெண்கள். 2 பேர் ஆண்கள் ஆவர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு