தேசிய செய்திகள்

முககவசங்களும், சமூக விலகலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரக்கூடும்: கோவா முதல்-மந்திரி

முககவசங்கள் அணிவதும், சமூக விலகலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரக்கூடும் என கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பனாஜி,

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 28,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 6362 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இல்லா மாநிலமாக கோவா உள்ளது.

இந்நிலையில் முகக்கவசம் அணிவதும், சமூக விலகலை கடைப்பிடிப்பதற்கும் மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், முகக்கவசம் அணிவதும், சமூக விலகலை கடைப்பிடிப்பதற்கும் மக்கள் பழகிக் கொள்ள வேண்டும். இது 2 ஆண்டுகளுக்குத் தொடரக்கூடும். கோவா வருவதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோர் வருவதை எண்ணி கவலை கொள்கிறோம். அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கான எல்லைகளை பூட்டுவதைத் தொடர விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு