தேசிய செய்திகள்

முன்னாள் பெண் மேயர் படுகொலை: தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை

முன்னாள் பெண் மேயர் படுகொலை தொடர்பாக, தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இந்த சம்பவத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. பின்னர் இது தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கும், நெல்லை போலீஸ் கமிஷனருக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

அதில், கொலை எப்படி நடந்தது? கொலை செய்தவர்கள் யார்? முதல் தகவல் அறிக்கை விவரங்கள், கொலை தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்? கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறதா? என்பன போன்ற விவரங்களை போலீசார் 3 நாட்களுக்குள் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் குறித்த காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு