பெங்களுரூ,
ஊழலுக்கு எதிராக போராடி வருபவரும் சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் விவசாயத்துறைக்கு மத்தியமாநில அரசுகள் அதிக ஊக்கம் அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வருமானத்திற்கான வழிகளை அரசுகள் தெரிவிக்க வேண்டும்.
உதவிகளை செய்ய வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வலியுறுத்தி வருகிற மார்ச் மாதம் 23ந் தேதி டெல்லியில் நான் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன்.ஸ்மார்ட் நகரங்களுக்கு பதிலாக நாம் ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்க வேண்டியது அவசியம். கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் நகரங்களும் முன்னேறும். நகரங்கள் வளர்ந்தால் நாடு முன்னேற்றம் அடையும்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார். #annahazare | #RamlilaMaidan